Indian OS: இந்தியாவின் OS... பயனர்களுக்கு வரமா... சாபமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

Indian OS: இந்தியாவின் OS... பயனர்களுக்கு வரமா... சாபமா?

Indian OS: இந்தியாவின் OS... பயனர்களுக்கு வரமா... சாபமா?


தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், Apple மற்றும் Google நிறுவன இயங்குதளங்களுக்கு இணையான புதிய மொபைல் இயங்குதளத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும்பாலும் கூகுள் ஆண்டாராய்டு அல்லது அப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனர் தகவல்கள், கடல் கடந்து வணிகம் செய்யும் நிறுவனங்களின் சர்வர்களில் தான் இருக்கும். இதனை இந்திய அரசு எப்போதும் கட்டுப்படுத்த முடியாது. இதன்காரணமாக இந்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.


ஜனவரி 25ஆம் தேதி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆப்பிள் ஐஓஎஸ், கூகுள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இணையான இயங்குதளத்தை இந்திய அரசு நிறுவும் என்று தெரிவித்துள்ளார். அப்படி இந்திய அரசு ஸ்மார்ட் சாதனங்களுக்கான புதிய இயங்குதளத்தை நிறுவும் பட்சத்தில், அதன் சாதக பாதகங்களை குறித்து பயனர்களாகிய நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.

ஏன் இந்திய இயங்குதளம்?
உலகெங்கிலும் உள்ள ஆளும் அரசுகளின் மத்தியில் நிலவும் சிந்தனை என்னவென்றால், ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இன்றைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் இருக்கும் இயங்குதளத்தை சொந்தமாக வைத்திருப்பதால், இணைய சுற்றுச்சூழல் அமைப்பின் மீது அவர்கள் அதிக கட்டுப்பாட்டை வைத்துள்ளனர் என்பது தான். பெரும்பாலான சந்தை மதிப்பீடுகளின்படி, உலகளவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில், 99% விழுக்காட்டினர் ஆப்பிளின் iOS மற்றும் Google இன் Android இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர்.

இந்த நிறுவனங்கள் முறையே கணினிகளுக்கான Chrome OS மற்றும் MacOS இயங்குதளங்களையும் கொண்டுள்ளன. இந்த இயங்குதளங்களின் மீதான கட்டுப்பாடுகள், பயன்பாடுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. தரவு சேகரிப்பு முதற்கொண்டு பயனர்களின் கட்டுப்பாட்டை இந்த இயங்குதளங்கள் கொண்டிருக்கும். தரவுகள் அதன் தாய் நிறுவனங்களுக்கு கடத்தப்படும். இந்த பயனர் தரவுகளைக் கொண்டு டெக் நிறுவனங்கள் பணம் ஈட்டும். இதன் காரணமாக தான, உலக நாடுகள் பலவற்றில், நம்பிக்கைக்கு எதிரான வழக்குகளை இந்நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது.

இந்திய அரசாங்கத்தின் கீழ் ஒரு இயங்குதளம் நிறுவப்பட்டால், அது பல கொள்கைகளை வகுத்து அதனடிப்படையில் வடிவமைக்கப்படலாம். இன்று தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கொள்கைகள், ஐரோப்பிய பொது தரவு பாதுகாப்பு விதிமுறைகள் (GDPR) போன்ற உலகளாவிய விதிமுறைகளை பின்பற்றி இருக்கவேண்டும்.
ஆனால், ஒரு அரசு எந்திரம் எவ்வாறு கொள்கைகளை மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. இன்னும் சொல்லப்போனால், பொதுமக்களின் தனியுரிமைத் தகவல்களை சேகரிக்கவும், அதனை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அரசாங்கத்தால் முடியும். அதற்கு அரசு தயாரிக்கும் இயங்குதளம் துணையாக இருக்கும்.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட OS ஏதேனும் உள்ளதா?
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இயங்குதளங்கள் எதுவும், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இருப்பினும், 2013ஆம் ஆண்டு, IIT ஆய்வாளர்கள் குழு Indus OS எனும் இயங்குதளத்தை உருவாக்கியது. இன்னும் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்தை, இதன் வடிவமைப்பாளர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.
தற்போது இதன் ஸ்கின்னை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், Indus App Bazaar செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்து வருகின்றனர் என்று இந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயலிகள் பெரும்பாலும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்திய அரசின் இந்த ஓஎஸ் திட்டம் ஒர்க்அவுட் ஆகுமா?
கூகிள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் இயங்குதளங்கள் சக்திவாய்ந்தவை. ஏனெனில் அவற்றின் இயக்க முறைமைகள் பயனர்களுக்கு எளிதில் விளங்கும்படியாக மனதில் பதிந்துவிட்டது. மைக்ரோசாப்ட் போன்ற டெக் ஜாம்பவான்களே இந்த இரண்டு நிறுவனங்களிடமும் போட்டியிட முயற்சித்து தோல்வியைத் தழுவினர் என்பது வரலாறு.

No comments:

Post a Comment

Post Top Ad