நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. அஜெண்டா இதுதான்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று வெளியிட்டார். இதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் வேட்பு மனித் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 7ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளை (ஜனவரி 27) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும்
இந்தக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment