கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!


கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்

தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 7கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,600 வருடங்களுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. சுடு மண் பானைகள், உறைகிணறுகள், மதில் சுவர்கள், கல்தூண் போன்ற அமைப்புடைய கல், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனிடையே, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் எட்டாம் கட்டம் என பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 7 இடங்களில் அகழாய்வுகள் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்இந்த நிலையில், கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad