கடைசி நேரத்துல இப்படியா ஆகணும்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்..!
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்’ படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் 'எப்.ஐ.ஆர்'. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள 'எப்.ஐ.ஆர்’ படம் மலேசியா, குவைத், மற்றும் கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் விஷ்ணு விஷால். இருப்பினும் மற்ற நாடுகளில் திட்டமிட்டப்படி இந்தப்படம் வெளியாகிறது.'எப்.ஐ.ஆர்’ தீவிரவாத பின்னணியில் உருவாகியிருப்பதால் மேற்கண்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் பிரம்மாண்டமாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment