பென்சன் தொகை உயரப் போகுது.. ஹேப்பி நியூஸ்!
லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் உயரவிருக்கிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. விரைவில் அவர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பு உள்ளது.
ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000லிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இந்த வரம்பை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு தீர்ப்பு கிடைத்தால் பென்சன் பணம் ரூ.8571 ஆக உயர்ந்துவிடும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்சன் தொகை 15000 ரூபாயிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் ஒருவேளை 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும்.ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000லிருந்து கணக்கிடப்படுவதால் இது ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடிப்படை சம்பள வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும். எனவே இந்த வழக்கு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திருத்தத் திட்டத்தை மத்திய அரசு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தியது. இதற்கு தனியார் துறை ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து EPFO அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment