தனுஷ் - சிவகார்த்திகேயன் மீண்டும் மோதல்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
தனுஷ் - சிவகார்த்திகேயன் மீண்டும் மோதல்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
மெரினா என்ற படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.அதன் பின் 3 படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்தார். அப்போது தனுஷிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அதன் காரணமாக தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார்.
இப்படம் சிவார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரும் மாற்றத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இதுவே தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகவும். அதன் பின் சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த இரண்டாவது படம்தான் காக்கி சட்டை.
அப்படத்தில் பணிபுரியும்போது சிவகார்த்திகேயனுக்கும் தனுஷிற்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. அதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இவர்களின் செயல்பாடுகள் அதை உறுதிப்படுத்தியது.இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது உண்மைதான் என பேச்சுக்கள் வேகமாக பரவ துவங்க சிவகார்த்திகேயன் அதை மறுத்தார். அதன் பிறகு தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார், அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. மேலும் இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார். பாலிவுட், கோலிவுட்டில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அதை தெலுங்கிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார் தனுஷ்.அதேபோல சிவகார்த்திகேயன் தற்போது ஜாதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதிப்பின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தனுஷ் எப்படி தன் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்த எண்ணி தெலுங்கில் அறிமுகமாகிறாரோ, அதேபோல தனுஷிற்கு போட்டியாக சிவகார்த்திகேயனும் தெலுங்கில் அறிமுகமாகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
No comments:
Post a Comment