குளிர்கால ஒலிம்பிக்கிற்கு பிறகு தாக்குதல்: மக்களை திரும்ப அழைக்கும் நாடுகள்!
குளிர்கால ஒலிம்பிக்கிற்கு பிறகு தாக்குதல்: மக்களை திரும்ப அழைக்கும் நாடுகள்!
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வஇதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
இதனிடையே, சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அங்கு தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை பல்வேறு உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளனருகிறது.
மேலும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்கள் தூதர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் திரும்ப அழைத்துள்ளன. முன்னதாக, உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment