தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!


தருமபுரி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"தருமபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கான காப்பீடு, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கத்திரி, வெண்டை, தக்காளி ஆகிய தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 15.02.2022 ஆகும். மேலும், வாழை, மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு
செய்வதற்கு கடைசி நாள் 28.02.2022 ஆகும். மேற்குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்.தருமபுரி மாவட்டத்தில் இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றே பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகிமேலும், விவரங்கள் பெற விவசாயிகள் தருமபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad