மதுப்பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 21, 2022

மதுப்பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

மதுப்பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!


உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மதுபிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் ( பிப்ரவரி19) தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 268 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மதுபிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அந்த இடத்துக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்று்ம் மது கூடங்களை மூட மதுவிலக்கு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அறிிவிப்பால் மதுபிரியர்கள் கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளனர். அதேசமயம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் டாஸ்மாக் சரக்கு கடைகள் மூடப்படுவதால் பக்கத்து ஏரியாவில் சரக்கு வாங்கி வெற்றியை கொண்டாடி கொள்ளலாம் என்று அவர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த 17,18 மற்றும் 19 மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளான நாளை வன்முறை, கைகலப்பு, சண்டைகள் என அதிரடி சம்பவம் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இத்தகைய சூழலில் மாநிலம் முழுவதும் மதுபான கடைகளை மூடாமல் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் சரக்கு கடைகள் மற்றும் பார்களை மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad