உள்ளாட்சித் தேர்தல்... உதறலில் திமுக உடன்பிறப்புகள்!
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி தொடர்பாக சமூகவலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கும் பல்வேறு தகவல்களை கண்டு உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
உளவுத் துறை, ஐபெக், மாவட்டச் செயலாளர்கள் என மூன்று இடங்களில் இருந்து பெறற பட்டியலில் இருந்து வடிக்கட்டி வேட்பாளர்கள் தேர்வு, உள்ளாட்சியிலும் தொடரும் கூட்டணி, ஆளுக்கொரு திசையாக பிரிந்து நிற்கும் அதிமுக கூட்டணி, உள்ளாட்சியில் ஆளுங்கட்சியே வெற்றி என்ற வரலாறு.... இவ்வளவு ப்ளஸ்கள் இருப்பதால் வெற்றி நமதே என்ற நேர்மறை எண்ணத்துடன் திமுக உடன்பிறப்புகள் உற்சாதமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவர்களி்ன் உற்சாகத்தை குலைக்கும் விதத்தில், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் தகவல்கள் உடன்பிறப்புகளை கலமடைய செய்துள்ளதாம்.
திமுக உடன்பிறப்புகளையே கலக்கமடைய செய்யும் அளவுக்கு அப்படி என்ற தகவல்கள் என்று விசாரி்த்தால், திமுக ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள ஐந்து சவரன் வரையிலான நதைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏழை, நடுத்தர மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றாமல், நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை முடிந்த அளவுக்கு திமுக அரசு குறைத்துவிட்டதால் வெகுஜென மக்கள் இந்த விஷயத்தில் ஆளுங் கட்சி மீது செம கடுப்பில் உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.இதேபோன்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம், இரண்டாயிரம் ரொக்கப் பணம் தரப்படும் என்ற தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே எஞ்சியதால், இந்த விஷயத்திலும் சாமானியர்கள் ஸ்டாலின் மீது வருத்தத்தில் உள்ளதாக மற்றொரு தகவலும் சோஷியல் மீடியாக்களி்ல் வலம் வந்து கொண்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக இவ்விரு விஷயங்கள் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு வரும் நிலையில் நீட் விவகாரம், பொதுமக்களின் பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் தனி பிரிவின் மெத்தப்போக்கு, மின் கட்டண கணக்கீட்டு முறையை மாதம் ஒருமுறையென இன்னமும் மாற்றாதது என துணை பிரச்னைகளும் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் தலைவலியை கொடுக்கும் என்றொரு தகவலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் சுற்றி கொண்டிருக்கின்றதாம்.
சமூக ஊடகங்களில் தீயாய் பரவிவரும் இந்த தகவல்கள் எல்லாம் ஒன்ரு சேர்ந்து ஒருவேளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை தந்துவிடுமோ என்று உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனராம்.
No comments:
Post a Comment