நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து? நீதிமன்றம் மறுப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து? நீதிமன்றம் மறுப்பு!

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து? நீதிமன்றம் மறுப்பு!



நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் விவசாய நகைக் கடன் தள்ளுபடிக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சோந்த லிங்கராஜ் தாக்கல் செய்த மனுவில் 2021 சட்டப் பேரவைத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து, விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கடந்த 2021 நவம்பா் 1ஆம் தேதி விவசாய நகைக் கடன் தள்ளுபடி தொடா்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் இல்லாத பகுதியைச் சோந்த விவசாயிகள் பலா், பொதுத்துறை வங்கிகளில் நகைகளை அடகு வைத்து விவசாயக் கடனை பெற்றுள்ளனா். அவா்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தாது. எனவே, விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடா்பான தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment

Post Top Ad