மொத்த மாநிலமும் இருளில் மூழ்கும் அபாயம்…டார்ச், பவர் பேங்கை தேடி அலையும் மக்கள்!.
புதுச்சேரியில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் உள்ள தென்றல் வீதி , குறிஞ்சி வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட வீதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டது.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் மினிபேருந்தை சிறைபிடித்து இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.மின்தடை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, மின்துறை தலைமை அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நேற்று இரவு முதல் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்துறை அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், புதுவை மின்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மின்துறையை சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment