தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவின் மாஸ்டர் பிளான்..வெளியான அதிர்ச்சி தகவல்..!
தனுஷை நடிகனாக்க அவரது தந்தை கஸ்தூரி ராஜா போட்ட திட்டம்
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இன்று சினிமாவே முழு மூச்சாக எண்ணி சினிமா துறையை நேசித்து பணிபுரிந்து வருகிறார் தனுஷ். ஆனால் அவரின் முதல் படத்தின் படப்பிடிப்பின் போது அவர் அப்படி இல்லையாம். நடிப்பதற்கு ஆர்வமே இல்லாமல் இருந்த தனுஷை அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா வலுக்கட்டாயமாக நடக்க வைத்தாராம்.
நடிப்பில் துளியும் ஆர்வம் இன்றி தனுஷ் நடித்த படம் தான் துள்ளுவதோ இளமை. பள்ளி பயின்றுகொண்டிருந்த தனுஷை ஒரு நாள் கஸ்தூரி ராஜா அழைத்து இனி பள்ளிக்கு செல்லவேண்டாம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்றாராம். அப்படி கூறிவிட்டு தனுஷை திடீரென நடிக்க சொன்னாராம் கஸ்தூரி ராஜா.
என்னதான் தனுஷிற்கு நடிப்பதில் ஆர்வம் இல்லையென்றாலும் தன் அப்பாவின் பேச்சிக்கு இணங்க துள்ளுவதோ இளமை படகில் நடித்தார். அப்படத்தின் கதை வசனம் மற்றும் இயக்கம் செல்வராகவன் தான்.இருந்தாலும் அன்று தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் புதுமுகம் என்பதால் படத்திற்கு விளம்பரம் தேவை என்று கருதினார் கஸ்தூரி ராஜா.
அதன் காரணமாக இயக்குனர் செல்வராகவன் என்று போடுவதற்கு பதிலாக கஸ்தூரி ராஜா அவரின் பெயரை போட்டாராம். ஏனென்றால் கஸ்தூரி ராஜா பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர். எனவே அவரின் பெயரை போட்டால் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், அதன் காரணமாக படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணினாராம் கஸ்தூரி ராஜா.
அதன் காரணமாகவே செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் கஸ்தூரி ராஜா தன் பெயரை இயக்கத்தில் போட்டுக்கொண்டார். அதன் பின் செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் மெகாஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment