ஜெயலலிதா வாயில் ஆலகால விஷம்; பகீர் தகவல் வெளியானது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 8, 2022

ஜெயலலிதா வாயில் ஆலகால விஷம்; பகீர் தகவல் வெளியானது!

ஜெயலலிதா வாயில் ஆலகால விஷம்; பகீர் தகவல் வெளியானது!

\


ஜெயலலிதா வாயில் ஆலகால விஷம் இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் நகராட்சி தேர்தலில் 15வது வார்டில் போட்டியிடும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிரமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு தான். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து, தெளிவாக உள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டியுள்ளது.நீட் தேர்வை நாங்கள் கொண்டு வந்தது என்று கூறுவது சட்டரீதியாக எதிரான நடவடிக்கை. கல்வி அமைச்சராக இருந்தபோது, எந்த இடத்திலும் நான் நீட் தேர்விற்க்காக கையெழுத்திடவில்லை.

இதை எங்கு வேண்டுமானாலும் நான் கூற முடியும். நீட் தேர்வுக்காக நாங்கள் யாரும் கையெழுத்திடவில்லை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள் வாதாடி இருக்கிறோம்.உச்சநீதிமன்றம் நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் எந்த மாநில முதலமைச்சராவது அதற்கு பதிலளித்தார்களா? அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்து போராடி அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்.

எங்களால் என்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள், கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5% இட ஒதுக்கீடும் கொண்டு வந்துள்ளோம்.இன்று 540 ஏழை குழந்தைகள் நீட் தேர்வின் மூலமாக மருத்துவ படிப்பு படிப்பதற்கு காரணம் எடப்பாடி அரசு தான். அந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கூட திமுக கட்சி எதிர்த்தது. தற்போது 8% மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாக தேர்வாகியுள்ளனர்.

தற்போது நீட் தேர்வால் ப்ளஸ், மைனஸ் இரண்டும் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கக்கூடாது என்ற காரணத்தால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்த்தோம்.இதனால் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றனர். இதை கொண்டு வந்தது தவறா? ஆனால் அந்தப் பயிற்சி மையத்தையும் திமுக அரசு முடக்கியுள்ளது. நீட் தேர்வை வைத்து முழுக்க முழுக்க திமுக அரசியல் செய்துகொண்டு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad