பென்சன் பணம் கிடைக்காது.. இந்த நம்பர் ரொம்ப முக்கியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 13, 2022

பென்சன் பணம் கிடைக்காது.. இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

பென்சன் பணம் கிடைக்காது.. இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!


பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்..

பென்சன் நம்பர்!

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சனர்களுக்கு ஒரு தனித்துவமான நம்பர் வழங்கப்படுகிறது. அதுதான் PPO (Pension Payment Order) நம்பர். இதன் அடிப்படையில்தான் பென்சனர்களின் ஓய்வுக் காலத்தில் பென்சன் தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த நம்பர் மிக முக்கியமான ஒன்று. இது இல்லாவிட்டால் பென்சன் கிடைக்காது.

தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

ஒருவேளை இந்த நம்பர் தொலைந்துபோனாலோ அல்லது மறந்துபோனாலோ என்ன செய்வீர்கள்? இந்த நம்பர் மறந்துபோனால், உண்மையில் நீங்கள் பயப்படத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக இந்த நம்பரைப் பெறும் வசதியை பிஎஃப் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

கண்டுபிடிப்பது எப்படி?

1. தொலைந்து போன PPO நம்பரை பெற, முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். https://www.epfindia.gov.in/site_en/index.php

2. உள்ளே சென்றதும் 'Online Services' பிரிவில் 'Pensioners Portal' என்ற வசதியை கிளிக் செய்யவும்.

3. இப்போது புதிய பக்கம் திறக்கும். அதில் 'Know Your PPO No' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பென்சன் வரும் வங்கிக் கணக்கு எண்ணை நிரப்ப வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் PF நம்பரைப் பதிவிட்டும் தேடலாம்.

5. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு 'submit' கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

6. அத பிறகு உங்கள் PPO நம்பரை திரையில் காண்பீர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad