ஐநாவில் தீர்மானம்: அமெரிக்காவா, ரஷியாவா... இந்தியாவின் ஆதரவு யாருக்கு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 25, 2022

ஐநாவில் தீர்மானம்: அமெரிக்காவா, ரஷியாவா... இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

ஐநாவில் தீர்மானம்: அமெரிக்காவா, ரஷியாவா... இந்தியாவின் ஆதரவு யாருக்கு?


ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.
கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.

ரஷியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன.
இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு சபையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது. அப்படி ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரஷியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்தியாவை ரஷிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த தீர்மானம் பற்றி டெல்லியில் உள்ள ரஷிய தூதரக அதிகாரி கூறும்போது, " இந்திய கூட்டாளிகள் ரஷியாவை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்" என தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad