ஊசி போட்டுக்கங்க.. இல்லாட்டி டிஸ்மிஸ் தான்.. அமெரிக்காவில் திடீர் பரபரப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 7, 2022

ஊசி போட்டுக்கங்க.. இல்லாட்டி டிஸ்மிஸ் தான்.. அமெரிக்காவில் திடீர் பரபரப்பு

ஊசி போட்டுக்கங்க.. இல்லாட்டி டிஸ்மிஸ் தான்.. அமெரிக்காவில் திடீர் பரபரப்பு


கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர் என அமெரிக்க படையினருக்கு எச்சரிக்கை.
அமெரிக்க ராணுவத்தினர் யாரேனும் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் அவர்களை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ அமைச்சர் கிறிஸ்டின் உர்முத் கூறுகையில், அமெரிக்க படையினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும். யாரேனும் ஊசி போட மறுத்தால் அவர்களால் படையினருக்கு ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது படையினரின் ஆயத்த நிலையை கேள்விக்குறியாக்கும். எனவே ஊசி போட்டுக் கொள்ள முன்வராதோர் பணியிலிருந்து நீக்கப்படுவர்.ஊசி போட முன்வராத வீரர்கள் முதல் கட்டமாக தனித்து பட்டியல் எடுக்கப்படுவர். அதன் பின்னர் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் ரத்து செய்யப்படும். அவர்களுக்கான இன்சென்டிவ், போனஸ், சிறப்பு ஊதியம் என எந்தச் சலுகையும் கொடுக்கப்பட மாட்டாது என்றார் அவர்..

அனைத்துப் பாதுகாப்புப் படையினருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான படையினர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இருப்பினும் கணிசமான வீரர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அது போல தடுப்பூசி போட மறுத்த 6 அதிகாரிகள், 2 பட்டாலியன் கமாண்டர்கள், 3073 படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். முதல் இரு அலைகளில் அமெரிக்கா கடும் உயிர் சேதத்தை சந்தித்தது. ஆனால் அடுத்து வந்த அலையில் பெரிதாக உயிர்ப் பலி இருக்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad