வலிமை படத்தின் முதல் விமர்சனம் வெளியானது..!படம் எப்படி இருக்கு தெரியுமா?
ட்விட்டரில் வலிமை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி வைரலாகிவருகிறது
நடிகர் அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளாக உருவான படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் H வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல், முதல் பார்வை ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்ட படக்குழு படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தது.

ஜனவரி 13 உலகம் முழுவதும் வலிமை திரையில் வெளியாகும் என போனி கபூர் அறிவித்தார். இதனைக்கேட்ட அஜித் ரசிகர்கள் அஜித்தை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரையில் பார்க்கப்போகும் செய்தியை கொண்டாடினர். ஆனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த செய்தி அஜித் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் வலிமை படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
No comments:
Post a Comment