ஊரடங்கில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

ஊரடங்கில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

ஊரடங்கில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!


தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் மார்ச் 2 ஆம் தேதி வரைக்கான தளர்வுகள் குறித்து அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி,
*சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கலாம்.
*இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மற்ற தளர்வுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.எனவே,

*நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை இன்று முதல் திறக்க, பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில், 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தலாம்.
*உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் முழுமையாக செயல்படலாம்.

*திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள்அனுமதிக்கப்படுவர்.

*உள் விளையாட்டு அரங்குகளில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 100 சதவீதம் பார்வையாளர்களுடன், விளையாட்டு போட்டிகள் நடத்தலாம்.

*கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

*அனைத்து பொழுது போக்கு கேளிக்கை பூங்காக்களும் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*சலுான்கள், அழகு நிலையங்கள் போன்றவை 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இன்று முதல் செயல்பட உள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad