கிரெடிட் கார்டு பிரச்சினை - இதைச் செய்தால் நீங்கள் தப்பிக்கலாம்!
அபராதம், அதிக வட்டி போன்ற பிரச்சினைகளில் நீங்கள் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்..
டெபிட் கார்டு இருக்கிறதோ இல்லையோ, நிறையப் பேரிடம் கிரெடிட் கார்டு இருக்கும். இந்தியாவில் இப்போது கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டு வாங்குவது ஈசியான விஷயம்தான். ஆனால் அதை மெயிண்டைன் செய்வது கஷ்டமான விஷயம். ஏனெனில், கிரெடிட் கார்டு வலையில் சிக்கி நஷ்டம் அடைந்தவர்கள் நிறையப் பேர். அதை சரியாகக் கையாண்டால் நிறைய பயன்களும் சலுகைகளும் அதில் இருக்கின்றன.
கிரெடிட் வைத்திருக்கும் பலருக்கு அதை எப்படி பிரச்சினை இல்லாமல் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. அபராதம் போன்ற பிரச்சினைகள் அதில் இருக்கிறன.
கிரெடிட் கார்டு கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் சரியாக செலுத்திவிட வேண்டும். ஒருநாள் தாமதம் ஆனால்கூட பெரிய அளவில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு மாதம் கட்டாமல் விட்டுவிட்டாலும் அடுத்தமாதமே பெரிய தொகை பாக்கி இருக்கும். வருடக் கணக்கில் பாக்கியைச் செலுத்தாமல் கடைசியில் லட்சக்கணக்கில் செட்டில்மெண்ட் செய்பவர்களும் உண்டு. இது வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கும்.
கிரெடிட் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் பயன்படுத்தினால் நல்லது. ஏனெனில், ஆன்லைன் ஷாப்பிங்கில் நிறைய கேஷ்பேக், டிஸ்கவுண்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே எந்த வங்கி அதிக ரிவார்டு, சலுகைகள் வழங்குகிறது.
அதேபோல, கிரெடிட் கார்டு பயன்பாடுக்கு ரிவார்டு பாயிண்டுகளும் கிடைக்கின்றன. அவற்றை வைத்து இலவசமாக பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். கிரெடிட் கார்டில் இதுபோல நிறைய சலுகைகள் இருந்தாலும், அபராதம் போன்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. வட்டியும் அதிகம்தான். கிரெடிட் கார்டு மூலமாக ஏடிஎம்களில் பணம் எடுத்தாலும் அதிகக் கட்டணம். எனவே ஸ்மார்ட்டாக அதைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்!
No comments:
Post a Comment