FACT CHECK: பிரதமர் மோடி போப்பை சந்திக்க டாக்ஸியில் பயணித்தாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

FACT CHECK: பிரதமர் மோடி போப்பை சந்திக்க டாக்ஸியில் பயணித்தாரா?

FACT CHECK: பிரதமர் மோடி போப்பை சந்திக்க டாக்ஸியில் பயணித்தாரா?


இத்தாலியில் போப் பிரான்சிஸை சந்திக்க பிரதமர் மோடி டாக்ஸியில் பயணித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.
ஜி-20 மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடுகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாடிகனுக்கு சென்ற மோடி, போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.
சுமார் 20 நிமிடங்கள் திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பு இணக்கமாக இருந்தது. அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பரவும் செய்தி

இந்த நிலையில், இத்தாலியில் போப் பிரான்சிஸை சந்திக்க பிரதமர் மோடி டாக்ஸியில் பயணித்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் மோடி இறங்கும் காரின் மேல் பகுதியில் டாக்ஸி என்று உள்ளது. மேலும், காரின் பின் புறத்தில் (La prima App in Italia per i Taxi) இத்தாலியின் முதல் டாக்ஸி செயலி என்று பொருள்படும் வாசகம் இடம் பெற்றுள்ளது.இதனை தங்களது பக்கத்தில் பகிரும் பலரும், இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமான தருணம் இது. இந்திய பிரதமருக்கு ஓர் அரசு வாகனத்தைக் கூட இத்தாலிய அரசு வழங்கவில்லை என்று இத்தாலி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், தகவலின் உண்மைத்தன்மை குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. மேலும், அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு வழிமுறை

சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது தொடர்பான பல்வேறு செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. அதன்படி, அந்த புகைப்படம் போலியானது எனவும், எடிட் செய்யப்பட்டது எனவும் உண்மை கண்டறிந்து quint இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

மேலும், அந்த புகைப்படத்தில் ஏ.என்.ஐ. செய்தி முகமையில் லோகோ உள்ளது. அதனடிப்படையில், ஏ.என்.ஐ., ட்விட்டர் பக்கத்தில் தேடும் போது, உண்மையான புகைப்படமும் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி, பிரதமர் மோடி பயணம் செய்தது வோக்ஸ்வேகன் செடான் ரக கார் என்பதும், அது வாடகை வாகனம் அல்ல என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad