இந்த வீடியோ மட்டும் இல்லை என்றால் இந்த விபத்து எப்படி நடந்தது என்றே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 2, 2022

இந்த வீடியோ மட்டும் இல்லை என்றால் இந்த விபத்து எப்படி நடந்தது என்றே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்...

இந்த வீடியோ மட்டும் இல்லை என்றால் இந்த விபத்து எப்படி நடந்தது என்றே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்...


கார் விபத்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
நீங்கள் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். காரில் சென்றாலும் சரி, பைக்கில் சென்றாலும் சரி, ஏன் நடந்து சென்றாலும் கவனமாக செல்லவேண்டும், உங்களுது சிறு கவன சிதறல் கூட நீங்கள் விபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். நடந்து செல்பவர்கள் கவனமாக இல்லை என்றாலும் அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இப்படியாக விபத்தில் சிக்காமல் செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் அனைவரும் பின்பற்றினால் விபத்துக்கள் நடப்பதை குறைக்கலாம். சிலர் போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறி வருகின்றனர். இப்படியாக ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டில் கார் ஓட்டிய போது ஏற்பட்ட ஒரு விபத்து குறித்த வீடியோவை தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
இந்த வீடியோவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒரு லாரியின் பின்னால் ஒரு கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது லாரியின் பின்னால் செல்ல பொறுமையில்லாமல் கார் டிரைவர் காரை ராங் ரூட்டில் ஓவர்டேக் செய்ய முயற்சிக்கிறார். அவர் ஓவர் டேக் செய்யும் போதுபின்னாலிருந்து வேறு ஒரு லாரி வருவதை கவனிக்கவில்லை. லாரி அருகில் வந்ததும் சுதாரித்துக்கொண்ட கார் மற்றும் லாரி டிரைவர் பிரேக் பிடித்து ஸ்டிரிங்கை திருப்பி விபத்தை தவிர்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் கொண்டுவரப்பட்ட பொருள் திடீரென பிரேக்பிடித்ததால் லாரியிலிருந்து அறுத்து ரோட்டில் விழுந்துள்ளது.
இந்த விபத்து அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த விபத்து கேமராவில் பதிவாகவில்லை என்றால் இப்படி ஒருவிபத்து நடந்ததே யாருக்கும் தெரிந்திருக்காது. இந்த விபத்து வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபான்சு காப்ரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் "ரோட்டில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு கூட மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி விடும். அதனால் எப்பொழுதும் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

No comments:

Post a Comment

Post Top Ad