ஒரே ஒரு டிக்டாக் வீடியோ.. ஓஹோவென ஆன கல்லூரி பேராசிரியை.. அவங்களுக்கு டப்பிங் பேசணுமாம்!
ஒரே ஒரு டிக்டாக் வீடியோ மூலம் தற்போது டப்பிங் பணியில் பிஸியாக இருந்து வருகிறார் கல்லூரி பேராசிரியர் கவிதா.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லூரி பேராசிரியை கவிதா. டிக்டாக் செயலி பிரபலமாக இருந்த போது அதில் ஒரு இமிட்டேட் வீடியோவை ஷேர் செய்தார் கவிதா. இதன் மூலம் பெரும் பிரபலமானார் கவிதா.தற்போது 24 மணிநேரம் போதாத அளவுக்கு டப்பிங் பணியில் பிஸியாக உள்ளார் கவிதா. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கவிதா தனக்கு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து தெரிவித்துள்ளார்.தான் செய்த இமிட்டேட் டிக்டாக் வீடியோ வைரலாக, உள்ளூர் லோக்கல் கேபிள் சேனல்களில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார் கவிதா. அதனை தொடர்ந்து தமிழ் எஃப் எம் சேனல்களிலும் அவருக்கு விளம்பரங்களை படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.தொடர்ந்து விளம்பரங்கள், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வரும் கவிதா, 2 மணிநேரம் தொடர்ந்து செய்தி வாசித்து நோபல் வோர்ல்டு ரெக்கார்டு சாதனையும் படைத்துள்ளார். மேலும் நடிகை நயன்தாராவுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ள கவிதா, அதற்காக ஹோம் வொர்க்கும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment