சென்னை டூ ஷீரடி... ஆன்மிக அன்பர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

சென்னை டூ ஷீரடி... ஆன்மிக அன்பர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னை டூ ஷீரடி... ஆன்மிக அன்பர்களுக்கு ஹேப்பி நியூஸ்!


ஷீரடி, காசிக்கு விமான சிறப்பு சுற்றுலாவுக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய அளவில் பொதுமக்களுக்கு ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் IRCTC வழங்கி வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு IRCTC தற்போது ஏற்பாடு செய்துள்ளது.

வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் இருந்து ஷீரடிக்கு மூன்று நாட்கள் சுற்றுலா மார்ச் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆன்மிக சுற்றுலாவில் மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, சிங்கனாபூர், திரிம்பகேஷ்வர், ஜோதிர்லிங்க கோயில் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இந்த பயணத்துக்கான கட்டணம் 14 ஆயிரத்து 500 ரூபாய்.இதேபோன்று சென்னை டூ காசி விமான சுற்றுலா மார்ச் 28 ஆம் தொடங்குகிறது. இந்த ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கான பயணக் கட்டணம் ஒருவருக்கு 29 ஆயிரத்து 500 ரூபாய்.
இதில் காசி, கயா, அலகாபாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம். கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே இந்த ஆன்மிக சுற்றுலாவுகக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று IRCTC அறிவித்துள்ளது.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை 90031 40682;, 82879 31974, 90031 40714; ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு பெறலாம். www.irctctourism.com என்ற, இணைய தள முகவரியிலும் தகவல்களை பெறலாம் என்று IRCTC தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad