IND vs WI: ‘டி20 தொடர்’…வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் இவர்தான்: பழைய வீரரை அழைக்கும் பிசிசிஐ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

IND vs WI: ‘டி20 தொடர்’…வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் இவர்தான்: பழைய வீரரை அழைக்கும் பிசிசிஐ!

IND vs WI: ‘டி20 தொடர்’…வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் இவர்தான்: பழைய வீரரை அழைக்கும் பிசிசிஐ!


வாஷிங்டன் சுந்தருக்கான மாற்று வீரரை அறிவித்தது பிசிசிஐ.
இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் துவங்கி நடைபெறவுள்ளது. போட்டிகள் 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்நிலையில், இத்தொடருக்கான அணியிலிருந்து கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும், இவர்களுக்கான மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் இருப்பார்கள் எனவும் தெரிவித்தது.

மற்றொருவர் விலகல்:

இந்நிலையில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்திற்கு சிகிச்சைபெற இன்று கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லவுள்ளார். இங்கு மூன்று வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.சிக்கலுக்கு தீர்வு:

டி20 தொடர் துவங்க ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மருத்துவ பாதுகாப்பு வட்டம் காரணமாக இவருக்கான மாற்று வீரரை அறிவிப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்ற குல்தீப் யாதவ், மாற்று வீரராக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், குவாரண்டைன் காரணமாக, இவரால் முதல் போட்டியில் பங்கேற்க முடியாது எனக் கூறப்படுகிறது.

இந்திய டி20 அணி:ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னாய், யுஜ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ்.

No comments:

Post a Comment

Post Top Ad