ஏப்ரல் 1 முதல் முழு ஊரடங்கு - அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

ஏப்ரல் 1 முதல் முழு ஊரடங்கு - அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது

கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதற்கிடையே, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் சீனாவில் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அங்கு கொரோனா தினசரி பாதிப்பு லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்து 24 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 432 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad