இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: 50 சதவீதம் பேருக்கு மட்டும்..? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 17, 2022

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: 50 சதவீதம் பேருக்கு மட்டும்..?

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: 50 சதவீதம் பேருக்கு மட்டும்..?

தமிழ்நாடு சட்டசபையில் நாளை 2022-2023 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையாற்றுகிறார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அதிருப்தி நிலவ வாய்ப்புள்ளதாக யூகிக்க முடிகிறது.
திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. குறிப்பாக, '' நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்'' உள்ளிட்ட வாக்குறுதிகளை சொல்லலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன.
இதில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு நாளை நடக்கும் பட்ஜெட் உரையில் இடம்பெறலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த திட்டம் மாதாமாதம் நடைமுறையில் இருக்கும் என்பதால் மாநில அரசுக்கு பெருமளவு நிதி தேவைப்படும். ஆட்சியின் கடைசி ஓராண்டாவது இந்த திட்டத்தை திமுக செயல்படுத்தலாம். அது பொதுவான ஓட்டு அரசியல் தந்திரம் தான். இருந்தாலும், இந்த திட்டத்தால் ஓரண்டாவது மக்கள் பயனடைவார்கள் என்பதில் குறைந்தபட்ச திருப்தி இருக்கும். ஒருவேளை நாளை பட்ஜெட்டில் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டால், 5 சவரன் நகை கடனை தள்ளுபடியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை போல இதற்கும் விதிக்கப்படலாம் என்பதில் சந்தேகமே இல்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் பொத்தாம் பொதுவாக ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 சவரன் வரையிலான நகை கடனை தள்ளுபடி செய்வோம்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இறுதியாக ஒரே குடும்ப அட்டை, போலி நகைகள்,AAY குடும்ப அட்டை முறைகேடு உள்ளிட்ட காரணங்களை கூறி 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் எனவும் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடையாது எனவும் அரசு உத்தரவிட்டதை நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad