1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மே மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போல், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில், 6 ஆம் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரை, மே மாதம் 5 ஆம் தேதி முதல், மே மாதம் 13 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், 9 ஆம் வகுப்புக்கு மட்டும், மே மாதம் 2 ஆம் தேதி முதல், மே 8 வரை செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை அடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை என சுமார் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment