கொரோனா நான்காவது அலை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ஜூன் மாதம் கொரோனா வைரஸ் நான்காவது அலை இந்தியாவில் வரக்கூடும் என்று கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளனர். அத்துடன் அந்த அலை நான்கு மாதங்கள் நீடிக்கும் எனவும் அனுமானிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜூன் முதல் அக்டோபர் வரை கொரோனா நான்காவது அலை இருக்கலாம் என கணித்துள்ள ஐஐடி, அதன் தீவிரம் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கொரோனா நான்காவது அலை தொடர்பாக, விசிக எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தி்ல் இன்று கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," ஜூன் 22 இல் கொரோனா நான்காவது அலை இந்தியாவை தாக்கத் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளது. இந்த கணிப்புப்படி நிகழ்ந்தால், அதனை எதிர்கொள்வதற்கு ஒன்றிய அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? எனக் கேட்டு இன்று கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன்" என்று ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தேசிய அளவில் குறைந்து வந்த நிலையில், புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை கடந்த தினங்களாக அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா நான்காவது அலை குறித்த ஐஐடியின் கணிப்பு பலித்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment