அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - வெளியானது சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சீக்கிய ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

விமான நிலைய வளாத்திற்குள் சிறிய வாளை எடுத்துச் செல்ல சீக்கிய ஊழியர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மத நம்பிக்கையின்படி அவர்கள் எப்போதும் வளைந்த வாள் ஒன்றை அணிந்திருக்க வேண்டும். இந்த வாளுக்கு கிர்பான் என்று பெயர். இவ்வாறு வாள் அணியும் கலாசாரத்தை அவர்கள் எப்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

இதற்கிடையே, விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பாதகத்திற்கு பயன்படுத்த உதவும் சிறு உபகரணங்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல கடந்த 4 ஆம் தேதி தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சீக்கியர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
சீக்கிய விமான ஊழியர்கள் கிர்பானை வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு, சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி உள்பட பல்வேறு சீக்கிய அமைப்புகள் விமானப் போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இது தொடர்பாக சீக்கிய அமைப்புகள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தன. அதில், மார்ச் 4 ஆம் தேதி வெளியான உத்தரவு என்பது சீக்கியர்களின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிர்பானை கொண்டு செல்வதற்கு சீக்கிய விமான ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கி புதிய உத்தரவு வெளியாகி உள்ளது. இதன்படி, இந்தியாவின் எந்த விமான நிலைய வளாகத்திற்குள்ளேயும், சீக்கிய பணியாளர்கள் கிர்பானை வைத்துக் கொள்ளலாம். கத்தி 22.86 செ.மீ.,க்கு (9 இன்ச்) அதிகமாக இருக்க கூடாது, பிளேடு எனப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.24 செ.மீ.,க்கு (6 இன்ச்) மேல் இருக்க கூடாது என மத்திய விமான போக்குவரத்தின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad