மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவ ல் அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
அடங்காத கொரோனா!
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தினசரி பாதிப்பு அதிகரிப்பு!
இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமைக்ரான் பரவல் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 188 பேர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவது, ஹாங்காங் நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிரம்பும் மருத்துவமனைகள்!
கொரோனா பரவல் காரணமாக, ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளும் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு?
முழு ஊரடங்கு அமல்படுத்த ஹாங்காங் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க, கடைகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
உக்ரைன் மீதான போர் நிறுத்தம் - ரஷ்யா திடீர் அறிவிப்பு!
இதற்கிடையே முழு ஊடரங்கு அச்சம் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், ஹாங்காங்கில் இருந்து சுமார் 78 ஆயிரம் பேர் சிங்கப்பூர் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment