BREAKING: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் - ரஷ்யா திடீர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 5, 2022

BREAKING: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் - ரஷ்யா திடீர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா திடீரென்று அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா திடீரென்று அறிவித்துள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதனால், எல்லையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது.


இதை அடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, "நேட்டோ" அமைப்பில் இணைய, உக்ரைன் ஆர்வம் காட்டியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் கோபம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீது படையெடுக்க, ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் கோரத் தாண்டவமாடின. இந்தத் தாக்குதலில், பொது மக்கள் உட்பட 200 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில், 9,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் கைக்கு வந்த "அமெரிக்க ஏவுகணை".. 200 ரஷ்ய பீரங்கிகள் காலி.. உக்கிரமாகும் யுத்தம்!

ஐரோப்பிய யூனியனின் மிகப்பெரிய அணு உலையை கைப்பற்றியதாகவும் ரஷ்யா நேற்று அறிவித்தது. இதற்கிடையே, போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவி சாய்க்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீதும், அதிபர் விளாடிமிர் புடின் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இந்நிலையில் இன்று, உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள பொது மக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad