மிக பிரபலமான இந்த மருத்துவமனையில் இரவு நேரக் காவலர்கள் இல்லாதது மிகவும் வேதனைக்குரியது என நோயாளிகள் புலம்புகிறார்கள்
மர்ம நபரின் திக்திக்
மிக பிரபலமான இந்த மருத்துவமனையில் இரவு நேரக் காவலர்கள் இல்லாதது மிகவும் வேதனைக்குரியது என நோயாளிகள் புலம்புகிறார்கள்
மர்ம நபரின் திக்திக்
இதனை அடுத்து கண் விழித்துப் பார்த்த ரம்யா, பேக் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றார். வெளியே கிடந்த பையை எடுத்து ஆராய்ந்ததில் பணம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது கண்டறியப்பட்டது. மேலும், ஏடிஎம் கார்டை திருடிச் சென்ற அந்த மர்ம நபர் அரக்கோணம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டர் சென்று ரம்யாவின் பாஸ்வேர்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். ரம்யா வைத்திருந்த செல்பேசி எண்ணுக்கு பணம் எடுத்த தகவல் வந்ததைத் தொடர்ந்து வங்கிக்கு போன் செய்து ஏடிஎம் கார்டை ரம்யா முடக்கியுள்ளார்.
பின்னர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தண்டபாணி விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் ரம்யா தங்கியிருந்த மருத்துவமனையின் பின் பக்க கதவை திறந்து நோயாளியின் அறைக்குள் சென்று அங்கு இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. அந்தக் காட்சிகளை வைத்து பணம் திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ரம்யாவின் நிலைமையை கண்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தண்டபாணி அறுவை சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மிக பிரபலமான இந்த மருத்துவமனையில் இரவு நேரக் காவலர்கள் இல்லாதது மிகவும் வேதனைக்குரியது என நோயாளிகள் புலம்புகிறார்கள்.
No comments:
Post a Comment