நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை ஓய்ந்திருப்பதை அடுத்து, திருப்பதி தேவஸ்தானம் முழுமையாக திறக்கப்பட்டு வழக்கமான முறைகளில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேவஸ்தானத்தில் ஆர்ஜித சேவை மற்றும் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகியுள்ள தகலல் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'கொரோனா பரவலால் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சாதாரண பக்தர்களுக்கான சர்வ தரிசனம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. தற்போது ஏழுமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வருகைக்கேற்ப பிரசாதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை TTD உயர்த்தவில்லை. சமீபத்தில் TTD போர்டு கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து வழக்கமான விவாதம்தான் நடத்தப்பட்டது' என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் திருமலை ஏழுமலையான் பக்தர்களும், திருமலை திருப்பதி ஓட்டல் உரிமையாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment