மு.க.ஸ்டாலின் மீது திருமா அதிருப்தி - உடையும் கூட்டணி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 4, 2022

மு.க.ஸ்டாலின் மீது திருமா அதிருப்தி - உடையும் கூட்டணி?

மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்

கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில், அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில், தொல்.திருமாவளவனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. இதில் கணிசமான தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது. இதை அடுத்து, திமுக தலைமையிலான கூட்டணியில், மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் - பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பான அறிவிப்பை, திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு; 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று, மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் - பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர், துணை மேயர் பதவிகளில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒருசில இடங்களில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுகவினர், போட்டி வேட்பாளர்கள் நிறுத்தி வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி விட்டு மறுபக்கம் திமுகவினர் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad