பாலியல் வன்கொடுமை குறித்து பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பில் கல்லூரி வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அக்னி சிறகே என்கிற தலைப்பில் மகளிர் தின விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ரோகினி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்!
பெண்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு ரங்கோலி, நடனப்போட்டி, உபயோகமல்லாத பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திரைப்பட நடிகை ரோகிணி சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதன் பின்னர் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகை ரோகினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் நீட்சி தான் பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. அடுத்த தலைமுறையினர் பெண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தையும், ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும்.
குடும்பங்கள் தனித்தனியாக இருப்பதாலும், குழந்தைகளை பெற்றோர்கள் சிறுவயதில் எப்படி வளர்த்தார்களோ? அதேபோல் முதுமையிலும் நாம் அவர்களை பார்த்துக்கொண்டால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.
சாதி பாகுபாடு காரணமாகத்தான் வன்கொடுமை அதிகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய புரிதல் வேண்டும். இவ்வாறு நடிகை ரோகினி பேசினார்.
நிகழ்வில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால் முருகன், இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ரேவதி மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment