ரயில்வே திடீர் அறிவிப்பு; குமரி-மும்பை பயணிகள் ஹேப்பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 5, 2022

ரயில்வே திடீர் அறிவிப்பு; குமரி-மும்பை பயணிகள் ஹேப்பி!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து புனே வரை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 31ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரி-மும்பை இடையே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கும், கேரள பயணிகளுக்கும் இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்நிலையில் ரயில்வே கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக இந்த ரயில் திடீரென புனேவுடன் நிறுத்தப்பட்டது. இதை அறிந்து, ரயில் பயணிகள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் படிப்படியாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட போதிலும் கூட கடந்த 2 ஆண்டுகளாக ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிஸ் ரயில் இயக்கப்படாமலேயே இருந்து வந்தது.
எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி-புனே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வருகிற 31ம் தேதி முதல் இந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும், மறுநாள் ஏப்ரல் 1ம் தேதி புனேவில் இருந்து முதல் ரயில் புறப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து தினமும் காலை 8.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே ரயில் நிலையத்தை சென்று அடையும். புனே ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 3வது நாள் பிற்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து அடையும் என்று கூறப்படுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad