நெல்லை கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல் ஒட்டுமொத்த திருநங்கைகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான வங்கி உதவித்தொகை, அரசு பதிவிதழில் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய தொழில் கடன் உள்ளிட்டவைகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
திருநங்கைகளுக்கு நீண்ட கால திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு உலக திருநங்கையர் தினத்தில் அவர்களுக்கான பரிசாக 4 வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது மக்கள் குறைதீர் கூட்டம், மீனவர்கள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் போல நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்து.
இத்திட்டம் வருகிற மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அந்தக் கூட்டத்தில் காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படித்த திருநங்கைகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் போட்டி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையம் மே மாதம் முதல் தொடங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். உயர்கல்வி படிக்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார். இந்த திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்ததற்கு திருநங்கைகள் கைதட்டி கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment