திமுக அரசின் நோக்கமே இது தான்; வெட்ட வெளிச்சமாக்கிய அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

திமுக அரசின் நோக்கமே இது தான்; வெட்ட வெளிச்சமாக்கிய அமைச்சர்!

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக விருதுநகர் வி.வி.வி பெண்கள் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் 149 முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்று திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்வு செய்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.
இந்த முகாமில் ராஜாபாளையம் ராம்கோ குரூப்ஸ் டெக்ஸ்டெய்ல்ஸ், விருதுநகர் வி.வி.வி. அண்ட் சன்ஸ் ஆயில், பெண்டாகன் அபேரல்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ், சென்னை அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ், அண்ணாமலை டொயோட்டோஸ், சுந்தரம் பைக்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், உஷா பயர் சேப்டி எக்குப்மெண்ட், ஜோஹா கார்ப்பரேசன், ஊட்டி ஸ்டெர்லிங்க் ஹாலிடே ரிசார்ட், பொன் பியூர் கெமிக்கல்ஸ், இந்;துஸ்தான் பிசிணஸ் ஆர்ஹனேசன், விடிஎம் லிட், தங்கமயில், நாகா லிட், ஸ்ரீஜெயவிலாஸ், ராம்ராஜ் காட்டன்ஸ், டிவிஸ் ஸ்ரீசக்ரா, முத்தூட் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்ரீகுமரன் தங்கமாளிகை உள்ளிட்ட 149 நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் சுமார் 1900க்கும் மேற்பட்ட ஆண்கள், 3000க்கும் மேற்பட்ட பெண்கள், 42 மாற்றுத்திறனாளிகள், 4 இலங்கை தமிழர்கள், 3 திருநங்கைகள், 2 ஆதரவற்ற விதவைகள் என மொத்தம் 5000க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். இளைஞர்கள் கல்வி கற்றலை கைவிடாது அறிவை வளர்த்துக்கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் தோல்வி என்பது வெற்றிக்கான முதல்படி. ஆகையால் முயற்சியை கைவிட கூடாது. இவ்வாறு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad