காயின் டிசிஎக்ஸ் (CoinDCX) சிஐபி (CIP) எனும் கிரிப்டோ முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரபல கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான காயின் டிசிஎக்ஸ் அதன் முதல் முதலீட்டுத் திட்டமான சிஐபி (CIP) எனும் கிரிப்டோ முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் கிரிப்டோவில் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. CIP திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் சந்தையின் வர்த்தக ஏற்ற, இறக்கங்களை பற்றிய தகவல்களை உறுதிசெய்யும் என்றும் கூறுகிறது.
மேலும் சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சிறப்பாக நிர்வகிக்கவும் காலப்போக்கில் மாதந்தோறும் முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகை நீண்ட காலத் திட்டங்களில் முதலீடு செய்யத் தேர்வுசெய்யலாம் என்றும் CoinDCX கூறுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு, CoinDCX இன் CIP இன் முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது SIP போன்றே செயல்படும் என காயின் டிசிஎக்ஸ் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்கள் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கிரிப்டோ சந்தை அபாயங்களுக்குட்பட்டு இந்த முதலீடுகள் இருக்கும் எனவும், சந்தை அபாயங்கள் குறைவாக இருக்கும்படி முதலீட்டுத் திட்டங்களை காயின் டிசிஎக்ஸ் அறிமுகப்படுத்தும் என அதன் இணை நிறுவனரான சுமித் குப்தா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் விரைவில் தெளிவான மற்றும் முறையான முதலீட்டு வழிகாட்டுதல்களின்படி அறிமுகப்படுத்தப்படும் எனவும் குப்தா கூறியுள்ளார்.
Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.
No comments:
Post a Comment