ரவுடியை கொன்று மாலை போட்டுச் சென்ற கும்பல் - திருச்சியில் திகில் க்ரைம் சீன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

ரவுடியை கொன்று மாலை போட்டுச் சென்ற கும்பல் - திருச்சியில் திகில் க்ரைம் சீன்

திருச்சியில் பிரபல ரவுடி கௌரி சங்கரை அவரது சொந்த குடோனில் வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். 35 வயதான இவர் திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது ஸ்ரீரங்கம் உட்பட திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான கௌரி சங்கருக்கு மண்ணச்சநல்லூர் வெங்ககுடியில் சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
அந்த தொழிற்சாலையில் அவர் நேற்றிரவு கட்டிலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. மேலும், வரும்போதே மாலை வாங்கிக்கொண்டு அந்த அந்த கும்பல் கெளரி சங்கர் உடலுக்கு மாலை அணிவித்து சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். அதே போல் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ரவுடி கௌரிசங்கர் கும்பல் ஏற்கனவே ஒருவரை கொலை செய்து இருப்பதாகவும், கொலை செய்யப்பட்ட ரவுடி நண்பர்கள் பழிக்குப்பழியாக கெளரி
சங்கரை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad