'புள்ளைய அடிக்காத'... கணவன் கண்டித்ததால் குடும்பமே மரணம்... சேலத்தில் துயரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 17, 2022

'புள்ளைய அடிக்காத'... கணவன் கண்டித்ததால் குடும்பமே மரணம்... சேலத்தில் துயரம்

சின்ன வீராணம் அருகே இரண்டு மகன்களை தூக்கில் தொங்க விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். லாரி தொழில் நடத்தி வரும் இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி குறிஞ்சி தமிழ். பட்டதாரியான இவர்களுக்கு ஏழு வயதில் விமலன் என்ற குழந்தையும் 4 வயதில் கார்த்திக் என்ற குழந்தையும் இருந்தனர். வீட்டின் மேல்மாடியில் ராஜேஷ் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கீழ்த்தளத்தில் மாமியார் முத்தம்மாள் மாமனார் ராமன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததால் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள மின் விசிறி ஒன்றில் குழந்தைகள் விமல் கார்த்திக் தூக்கில் சடலமாக காணப்பட்டனர்.
மேலும், தொட்டில் கட்டும் கம்பியில் சேலையில் குறிஞ்சி தமிழ் தூக்கிட்டு சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ராஜேஷ் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இரண்டு குழந்தை மற்றும் மனைவியை மீட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் குழந்தையை படிக்கச் சொல்லி குறிஞ்சி தமிழ் அடித்ததாகவும் அதனை பார்த்த மாமியார் குழந்தையை அடிக்க கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ராஜேஷ் குழந்தையை அடித்தது குறித்து குறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் இதுபோன்று குழந்தையை அடிக்க கூடாது எனவும் கண்டித்துவிட்டு ராஜேஷ் கடைக்குச் சென்றுள்ளார். இதனிடையே கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் திட்டியதால் குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad