விராலிமலை அருகே புகார் அளித்த மாற்றுத்திறனாளியை தாக்கிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டி என்ற ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சங்கர் (29). இவருக்கு பிறவிலேயே இரண்டு கண்களிலும் பார்வையிழந்தவர்.
இந்த நிலையில் சங்கர் கவரப்பட்டி பள்ளி அருகே யாரோ அரசுக்கு தெரியாமல் மது விற்பனை செய்வதாகவும் அதனை தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டியும் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரை எடுத்துக்கொண்டு புகாரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உரிய நடவடிக்கை எடுக்க விராலிமலை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
இதை அறிந்த விராலிமலை காவல் நிலைய அதிகாரிகள் " நீ எப்படி 100 க்கு அழைத்து தகவல் சொல்லாலாம், நீயும் மதுபானம் விற்பனை செய்வதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. விசாரனைக்கு காவல் நிலையம் வர வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு காவல் நிலையம் வெளியில் உள்ள புளிய மரத்தடியில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது பார்வையற்ற மாற்று திறனாளி சங்கர் விராலிமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பிரச்சினையை அறிந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.விஜயபாஸ்கர் மத்திய மண்டல ஐஜி.பாலகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment