கே.என்.நேரு செய்த செயல்... முதல்வர் ஸ்டாலின் செம அப்செட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 13, 2022

கே.என்.நேரு செய்த செயல்... முதல்வர் ஸ்டாலின் செம அப்செட்!

திமுக மூத்த அமைச்சரான கே.என். நேரு -பங்காரு அடிகளார் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பை மையமாக வைத்து நெட்டிசன்கள் திமுகவை ஒருபக்கம் வறுத்தெடுத்து வர, மறுபக்கம் திமுக எம்பியான செந்தில்குமார் இந்த விஷயத்தில் அமைச்சருக்கு அட்வைஸ் செய்துள்ளதால் நேரு மீது ஸ்டாலின் செம அட்செட்டில் உள்ளாராம்.
பெரியாரின் கொள்கையை பின்பற்றி வளர்ந்த கட்சி என்பதால் திமுகவினர் யாராவது கோயிலுக்கு சென்றாலோ, ஆன்மிக குருக்களை சந்தித்தாலோ அது கடுமையாக விமர்சிக்கப்படுவதுடன், கேலியும் பேசப்படுவது வழக்கம்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி கனிமொழி என கருணாநிதி குடும்பத்தினர் கோயிலுக்கு செல்லும்போது அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் கூடுதலாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. சமூக வலைதளங்களில் கேலி பொருளாகவும் ஆகிறது. அப்போதெல்லாம கோயிலுக்கு போவது, இறைவனை வழிபடுவதெல்லாம் தனிமனித சுதந்திரம் என்று உடன்பிறப்புகள் நாசூ்ககாக சமாளிப்பார்கள்.

திமுகவுக்கு அப்படியொரு சம்பவம்தான் தற்போதும் நேர்ந்துள்ளது. ஆனால் இந்த நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளவர் மூத்த அமைச்சர் கே.என்.நேரு. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குருவான பங்காரு அடிகளாரை, அமைச்சர் கே என் நேரு நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக தகவல் வெளியாகியது.

பங்காரு அடிகளாரை சந்தித்தது கே.என்.நேருவா? ஆவியா? சமூக வலைதளங்களில் கலகல!

இந்த சந்திப்பின்போது அமைச்சர், தன் அருகில் சோபா இருந்தும் அடிகளாரின் முன் தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் தான் சர்ச்சைக்கு காரணம். இந்த புகைப்படம் நெட்டிசன் கண்களுக்கு பட்டதுதான் தாமதம்... ஆஹா சன்டேயும் அதுவுமா செம கன்டென்ட் கிடைச்சிடுச்சு என்று அமைச்சர் கே.என்.நேருவையும், திமுகவையும் வெச்சு செய்து வருகின்றனர். அமைச்சர் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலைஞர் கூட வயசுல பெரியவர் தான், அப்புறம் எதுக்கு அவருக்கு சமமா உட்கார்ந்து பேசுனீங்க? எடப்பாடி மாதிரி தரைல படுத்து உருண்டு இருக்கலாம்ல?? ����‍♂️
@KN_NEHRU' என்று நெட்டிசன் ஒருவர் பங்கமாக கலாய்த்துள்ளார்.

'சோபாவில் உட்கார்ந்தால் வேட்டியில கரையை காணோம்...எழுந்து போயிட்டார் என்று பார்த்தால் யாருமே இல்லாம யாருக்கு சால்வை பிரிக்கறாங்கன்னே தெரியல..
எப்பா இன்னும் எவ்வளவு "போட்டோ" வச்சிருக்கீங்க? முடிவுக்கு வர முடியல டா சாமி' என்று மற்றொரு நெட்டிசன் தன் பங்குக்கு முட்டுக்கொடுத்துள்ளார்.

இப்படி நெட்டிசன்கள் சன்டேயும் அதுவுமா நேரு -பங்காரு அடிகளார் சந்திப்பை வைத்து பங்கமாக கலாய்தது வர, இவர்களுக்கெல்லாம் ஹைலைட்டாக திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவு உடன்பிறப்புகளை செம டென்ஷன் ஆக்கியுள்ளது.
'கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே' என்று அவர் பதிவிட்டுள்ளது திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நேரு - பங்காரு அடிகளார் சந்திப்பை ஒருபக்கம் நெட்டிசன்கள் கலாய்த்து வர மறுபக்கம் இந்த விஷயத்தில் திமுக எம்பி ஒருவரே அமைச்சருக்கு அட்வைஸ் அளித்துள்ளதால் அமைச்சர் நேரு மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad