திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு விடுதி துணை காப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட சூசைநகர் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான திரு இருதய சகோதரர்கள் இல்லம் என்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
காதல் வேணும்... சாதி வேணாம்... அதிமுக பிரமுகரை நம்பி நடு தெருவுக்கு வந்த காதலி!
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் புனித வளனார் அன்பு இல்லம் என்ற விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட விடுதியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு துணை காப்பாளராக பணிபுரியும் துரைப்பாண்டியன் என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். புகாரின் பேரில் நேரில் சென்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் துணை வார்டன் துரைபாண்டியன் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துரைபாண்டியன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைபாண்டியால் 10க்கும் மேற்பட்ட சிறார்கள் பாலியல் தொல்லை அனுபவித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகளை காக்க வேண்டிய விடுதி காப்பாளரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment