ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அடுத்த சிக்கல்: நீதிமன்றம் சொல்வது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 23, 2022

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அடுத்த சிக்கல்: நீதிமன்றம் சொல்வது என்ன?

ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி - கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. - கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பழனிச்சாமி இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சி நிர்வாகிகளை துன்புறுத்தும் நோக்கில் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கட்சி உறுப்பினராக இல்லாத நபர், கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும், கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
நிராகரிக்க கோரிய மனுவுக்கு பதிலளித்து கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், தன்னை நீக்கியதே சட்டவிரோதம் என்பதால், இந்த வழக்கை தாக்கல் செய்ய தனக்கு அடிப்படை உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்ததாக அதிமுக கூறியுள்ளது தவறு எனவும், சக உறுப்பினர்களின் எண்ணத்தையே பிரதிபலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான வழக்கை நிராகரிக்க கோரிய மனு மீதான இறுதி விசாரணையை நீதிபதி வேல்முருகன் மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad