தலை முடியை சரியாக வெட்ட சொன்ன தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற அரசு பள்ளி மாணவனின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாணவனுக்கு பயந்து அலுவலகத்திற்குள் சென்று தப்பித்த தலைமை ஆசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள் வேதனைப் படுகின்றனர். மாணவர்கள் அப்படி என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கு பல புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலை முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன், மாணவனுக்கு பயந்து அலுவலக கதவை பூட்டி தப்பித்த தலைமை ஆசிரியர் என இதுவரை நடக்காத கொடுமை நடந்துள்ளது.
மேலும் பள்ளியில் இருந்த நாற்காலி மற்றும் அலுவலக பொருட்களை சூறையாடியும், மாணவனை கிட்ட நெருங்க முடியாமல் ஆசிரியர்கள் பயந்து தூரம் நிற்கும் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஏற்கனவே தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மாணவன் ஆசிரியரை மிரட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சேலம் அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற மாணவனின் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment