புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
புதுச்சேரி பெரியகடை காவல் நிலைய எஸ் ஐ.சிவசங்கரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாமல் வந்த பல்சர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அந்த வண்டியில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது செயின்ட் தெரசா வீதியிலிருந்து வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பல்சர் பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டு, அந்த வண்டியிலேயே நம்பர் பிளேட் இல்லாமல் இருவரும் வேறு வண்டி திருடலாம் என்று வந்தபோது போலிஸ் இடம் மாட்டிக்கொண்ட தாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன்பேரில் இருவரையும் பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து மீண்டும் விசாரித்ததில் அவர்கள் இருவரும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த விஜய், பாலா ஆகியோர் என்பதும், உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெல்லித்தோப்பு பகுதியில் மேலும் 2 வண்டி திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 4 வண்டியை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment