பிரதமர் மோடிக்கு தூது விட்ட ஓபிஎஸ் - இபிஎஸ்.. காரணம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 10, 2022

பிரதமர் மோடிக்கு தூது விட்ட ஓபிஎஸ் - இபிஎஸ்.. காரணம் என்ன?

மோடிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், உத்தர பிரதேச மாநிலம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மைக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், பாஜக முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட, நான்கு மாநிலங்களில், பாஜக ஆட்சி அமைய உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதி உள்ள கடிதத்தில், "உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள். இது, உங்களின் திறமையான ஆளுமை மற்றும் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. வளர்ச்சிக்கான தீர்ப்பு இது" என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad