"Jetlag" கொஞ்சம் கூட இல்லையே.. "குடுகுடு"ன்னு ஓடுறாரே.. வியக்க வைக்கும் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 29, 2022

"Jetlag" கொஞ்சம் கூட இல்லையே.. "குடுகுடு"ன்னு ஓடுறாரே.. வியக்க வைக்கும் ஸ்டாலின்!

துபாய், அபுதாபி போய் விட்டு வந்த களைப்பே தெரியாமல் அடுத்தடுத்து ஓட ஆரம்பித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

69 வயதில் இத்தனை சுறுசுறுப்பா.. இப்படியும் ஒரு தலைவரா என்று வியக்க வைக்கும் அளவுக்கு ச்சும்மா ஓடி ஓடி அசத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் ஒரு Fitness freak. இளம் வயதிலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். கருணாநிதியின் மகன் என்பதால் சலிக்காமல் வேலை பார்ப்பதில் வல்லவர். தந்தை போல பேச்சாலும், எழுத்தாற்றலாலும் ஸ்டாலின் வளரவில்லை. மாறாக, திறமையாலும், சுறுசுறுப்பாலும், சமயோஜித செயல்பாடுகளாலும் தனது தகுதியை வளர்த்துக் கொண்டவர்.

நிர்வாகத் திறமை இல்லை என்று ஒரு காலத்தில் எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஸ்டாலின். அவரது உடல் நலனைக் கூட கிண்டல் செய்தார்கள். ஆனால் அத்தனை பேரையும் அசர வைக்கும் வகையில் ஒரு புயல் போல கலக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்சமீபத்தில்தான் துபாய், அபுதாபிக்கு போய் வந்தார் முதல்வர். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்தித்தார். அவர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது தமிழக அரசு. இதுதவிர பல்வேறு முக்கிய இடங்களுக்கும் சென்றார். முக்கியஸ்தர்களைச் சந்தித்தார். தமிழர்களைச் சந்தித்தார். இரு நாடுகளிலும் மேற்கொண்ட வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவுதான் சென்னை திரும்பினார்.

சரி சென்னை திரும்பி விட்டாரே, நேராக வீட்டுக்குப் போய் படுத்துத் தூங்கி ரெஸ்ட் எடுப்பார் என்று பார்த்தால் அதெல்லாம் முடியாது என்று கூறும் வகையில், விமான நிலையத்தில் வைத்தே தனது பயணத்தை விளக்கி, தமிழ்நாட்டுக்கு இதில் கிடைத்துள்ள நன்மைகளை விவரித்து இத்தனை செய்து விட்டு வந்துள்ளேன் என்று மன நிறைவுடன் கூறி விட்டு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்து விட்டு அதற்குப் பிறகுதான் வீட்டுக்குக் கிளம்பிப் போனார் ஸ்டாலின்.
ஸ்டாலின்நமக்கு நினைவு தெரிந்து, நள்ளிரவுக்கு மேல் பிரஸ் மீட் வைத்த முதல் தமிழக தலைவர் ஸ்டாலினாகத்தான் இருக்க முடியும். இது என்ன.. இதை விட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு பாருங்க என்று கூறும் அளவுக்கு இன்று காலை பரபரப்பாக அதிர வைத்து விட்டார் ஸ்டாலின். அதாவது 2 நாடுகள் போய் வந்த அலுப்பு கொஞ்சம் கூட இல்லாமல், ஜெட்லாக் என்று சொல்லப்படும் விமான பயண அலுப்பும் சற்றும் இல்லாமல், அவர் பாட்டுக்குக் கிளம்பி பெருங்குடிக்கு வந்து விட்டார் ஸ்டாலின்.

பெருங்குடியில் அமேசான் நிறுவனம் பிரமாண்ட அலுவலகத்தை கட்டியுள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய அளுவலகக் கட்டடம் இதுதான். இந்தியாவிலேயே 2வது பெரிய அலுவலகம் இது. இந்தக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விரைவில் தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இது உதவும் என்றும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அடுத்து வேளச்சேரிக்குக் கிளம்பினார்.

ஸ்டாலின்அங்கு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் 5.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர். அவருடன் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜனும் உடன் சென்றார். வரும் பருவமழைக்கு முன்பே, சென்னை முழுவதும் வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.
இப்படி கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல், சாதாரணக் குடிமக்களுக்கும் கூட ஒரு Best Rolemodel என்பதில் சந்தேகமில்லை. எந்த வேலை செய்தாலும் அதில் நிறைவும், முழுமையும் இருக்க வேண்டும். செய்யும் வேலையை சுறுசுறுப்பாகவும், சுத்தமாகவும் செய்ய வேண்டும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக தாராளமாக காட்டலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad